ரொறன்ரோவில் வீடுகளின் விற்பனை விலையானது கடந்த வருடத்திலும் பார்க்க பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நகரின் வீடு விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்திற்கான வீடுகளின் விற்பனையானது, கடந்த வருடம் ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் குறைவடைந்துள்ளது.
கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் வீடுகளின் சராசரி விற்பனை விலையானது 7 இலட்சத்து 46 ஆயிரத்து 218 அமெரிக்க டொலர்களாகும். இந்த விலையானது கடந்த வருடத்தில் 5 வீத உயர்வை வெளிப்படுத்தியிருந்தது.
வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கான வரியை 15 வீதத்தினால் அதிகரித்தல் உள்ளிட்ட ஒன்ராறியோ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களினால் வீடுகளின் விற்பனை இவ்வாறு மூன்றாவது மாதமாகவும் தொடர்ந்து சரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.