வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலைப் பகுதியை அதிகாலையில் இரவோடு இரவாகச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இன்று காலை வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையி