வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
வடக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்று வரும் குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விசேட சந்திப்பு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலமைச்சா் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அண்மையில் யாழில் இடம்பெறும் வன்முறைச்சம்பவங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.