கியூபெக்கில் அரசியல் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வார காலத்தில், மும்மடங்காக அதிகரித்துள்ளதாக கியூபெக் மாநில குடிவரவு அமைச்சர் காத்லீன் வெய்ல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி வரையிலான நிலைவரப்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 பேர் அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில், தற்போது அது நாள் ஒன்றுக்கு 150 என அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தாம் கடுமையான அழுத்தங்களைச் சந்தித்து வருகின்ற போதிலும், கியூபெக் மாநில அரசினால் அதனை கையாள முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையினை உரிய முறையில் கையாள்வதற்கு ஏதுவான அனுபவம் வாய்ந்த, பலமான சமூக வலையமைப்பு தம்மிடம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.