அமெரிக்க பசிபிஃக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியாவுக்கு சீற்றத்துடன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு சிலமணி நேரம் கழித்து வட கொரிய ராணுவத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி அந்நாட்டு அரசு ஊடகம் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்: வட கொரியா எச்சரிக்கை
வட கொரியாவுடனான வர்த்தக உறவு: இந்தியா கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்
வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான இந்த அறிக்கை பறிமாற்றம் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தீவிரமாக அதிகரித்துள்ளது.
வட கொரியா மீதான மேலும் புதிய பொருளாதார தடைகளுக்கு சமீபத்தில் ஐ.நா ஒப்புதல் வழங்கியது. அதற்கு, ”எங்களுடைய இறையாண்மை மீது தீவிரமான வன்முறை மீறல்” என்று கருத்து தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா இதற்கான விலையை கொடுக்கும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.