கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள கனேடிய போதகர் ஹியோங் சோ லிம் நேற்றைய தினம் ரொறன்ரோவை வந்தடைந்துள்ளார்.
கனடாவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் தேவாலயத்தில் மூத்த போதகராக பணியாற்றிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வடகொரியாவில் கைது செய்யப்பட்டார்.
வடகொரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வடகொரிய சிறையில் வாடிய ஹியோங் சோ லிம் கடந்த வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அரசாங்கத்தின் தனிப்பட்ட விமானத்தில் ஜப்பான் ஊடான நீண்டதூர பயணத்தில் ஹியோங் சோ லிம் நேற்றைய தினம் ரொறன்ரோவை வந்தடைந்துள்ளார்.