திருத்தி அமைக்கப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்திருந்தது. இந்த சட்டம் மீளவும் திருத்தி அமைக்கப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு முரணான விடயங்கள் திருத்தி அமைக்கப்பட்டு புதிய உத்தேச சட்ட திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
FacebookTwitterGoogle+Share