முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்கள் காரணமாக இவ்வாறு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன.
மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகள் மிகுந்த மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரசாங்கம் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மையில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்படும் என தெரிவிக்க்பபட்டுள்ளது.