அமெரிக்க அரசாங்கத்தின் மீது கனேடியர்கள் மிகவும் மோசமான அபிப்பிராயத்தை கொண்டிருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் இயங்கும் மக்கள் கருத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின் போது சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் தொடர்பான கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதன்போது பெரும்பாலான கனேடியர்கள் ஜப்பானுக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜப்பானுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தரப்படுத்தல் பட்டியலில் ரஷ்யா இறுதி இடத்திலும் அமெரிக்கா அதற்கு ஒருபடி மேலாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கருத்துக் கணிப்பின் பிரகாரம் அமெரிக்கா மற்றும் ரஷ்ய மீது கனேடியர்கள் பெரும் அதிருப்தியை கொண்டுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுத்தப்பட்டுள்ளது.