அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடினமான நிலைப்பாடு, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களை நிறுத்துவதற்கு உதவியாக இருக்கும் என தென்கொரிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடனான, தென்கொரியாவின் கூட்டு பயிற்சியினால் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பில் தென்கொரியர்கள் மத்தியில் பல மாற்று கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், ஒரு தரப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
கொரிய தீபகற்பத்தின் சூழ்நிலை கவலையடையச் செய்கின்ற போதிலும், அமெரிக்காவுடனான கூட்டுப்பயிற்சி அவசியமானதாக உள்ளதாக தலைநகர் சியோலிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வடகொரியாவின் புத்திசாலித்தனமற்ற செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க இராணுவம் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.