அமெரிக்காவின் வேர்ஜினியாவின் சார்லோட்ஸ்வில் பகுதியில் நிறரீதியான வன்முறைகளை தூண்டுபவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் தார்மீக ரீதியில் சமமானவர்களே என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டித்துள்ளார்
சார்லோட்ஸ்வில் பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள நியோ நாஜிகள் என கருதப்படுபவர்கள் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெரேசா மே அவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்
பாசிச கருத்துக்களை திணிப்பதற்கும் பரப்புவதற்கும் முற்படுபவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் சமமானவர்கள் என நான் கருதவில்லை எனவும் முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் அதிதீவிர வலதுசாரி கொள்கைகளை கண்டிக்கவேண்டியது அவசியம் எனவும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை டிரம்பின் இந்த கருத்திற்காக இங்கிலாந்திற்கான அவரின் பயணத்தினை இரத்துச்செய்வதற்கு பிரதமர் மறுத்துள்ளார். டிரம்பின் கருத்தை தொடர்ந்து அவரது இங்கிலாந்து பயணத்தினை இரத்துச்செய்யவேண்டும் என தொழிற்கட்சியின் தலைவர் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.