ரொறொன்ரோ- கடந்த மாதம் குறிப்பிட்ட சில திகதிகளில் ஸ்காபுரோவில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டவர்கள் ஹெப்படைடிஸ் ஏ குறித்த சோதனை செய்ய வேண்டும் என ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு எச்சரிக்கின்றது.
2277 கிங்ஸ்ரன் வீதியில் அமைந்துள்ள கிளிவ்சைட் பிஸ்ரோவில் யூலை 21, 25 முதல்29 மற்றும் ஆகஸ்ட் 2-மற்றும் 4-ஆகிய திகதிகளில் சாத்தியமான வெளிப்பாடு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட உணவகத்தின் பணியாளர் ஒருவருக்கு ஹெப்படைடிஸ் ஏ இருந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திகதிகளில் மேற்படி உணவகத்திற்கு சென்றவர்கள் ஏதாவது அறிகுறிகள் தென்படுகின்றனவா என கவனிக்குமாறும் கைகளை கழுவுதலை முழுமையாக கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆகஸ்ட் 2 மற்றும் 4-ந்திகதிகளில் பிஸ்ட்ரோ உணவகத்தில் சாப்பிட்டவர்களிற்கு இலவச தடுப்பூசி கிளினிங் இடம்பெறுகின்றதெனவும் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
காய்ச்சல், சோர்வு, பசியின்மை, குமட்டல்/ வாந்தி, கருமையான சிறுநீர், வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை, தோல் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இந்த வைரஸ் கல்லீரல் தொற்றையும் ஏற்படுத்தும் இதற்கான அறிகுறிகள் பல நாட்கள் முதல் பல மாதங்கள் நீடிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
தொற்று ஏற்பட்டு 15 நாட்களிற்குள் அறிகுறிகள் தென்படலாம். சிலரிற்கு அறிகுறிகள் தென்படமாட்டா.