அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமது வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி அரசியல் கைதிகள் நேற்று உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்றும் அவர்களது பேராட்டம் தொடர்கின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து உணவைத் தவிர்த்தால், அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.