வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் றுஅதிகாலை 5 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, காலை 6 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. இதையடுத்து, சுவாமி வீதியுலாவும் இடம்பெற்றது. கொடியேற்ற திருவிழாவில், பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பங்கேற்றனர்
இன்று ஆரம்பமாகியுள்ள செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் வரும் 30 ஆம் திகதி காலை பூங்காவனமும், செப்ரெம்பர் 04ஆம் திகதி மாலை சப்பறமும் , செப்ரெம்பர் 05ஆம் திகதி காலை தேர்த் திருவிழாவும், 06ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.