ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதரகத்தின் டுவிற்றர் எனப்படும் கீச்சக பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்துலக சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.