அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டதால், பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல் துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை பொறுப்பை கவனிப்பார்.பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.