ளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வை.எம்.சி.ஏ காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வை.எம்.சி.ஏ. காணியில் இருந்து படையினர் முழுமையாக இன்று வெளியேறி காணியை உரிய நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஏ-35 வீதியின் முரசுமோட்டை கோரக்கன்கட்டுப் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக படையினரின் பயன்பாட்டில் இருந்து வந்த வை.எம்.சி.ஏ.காணி விடுவிக்கப்பட்டுள்ளது.