NAFTA எனப்படும், கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்க இடையேயான வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான முதல் சுற்று பேச்சுக்கள் டிவுக்கு வந்துள்ளன.
பல ஆண்டுகளாக நடப்பில் உள்ள இந்த உடன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று, அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து, எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வது என்பது குறித்த ஆரம்பகட்ட பேச்சுக்களே தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
அவற்றுள் வோசிங்டனில் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுக்கள் நேற்று முடிவுக்கு வந்துள்ள நிலையி்ல், இன்னமும் மிக முக்கிய விடயங்கள் பலவும் எதிர்வரும் பேச்சுகளின் போது விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆரம்பகட்ட பேச்சுக்களின் முடிவில் நேற்று மூன்று நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதய இந்த ஒப்பந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு என்ன பெயரிடுவது என்பது தொடர்பிலேயே இணக்கப்பாட்டினை எட்ட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த ஒப்பந்ததினை “நவீனமயப்படுத்துதல்” என்ற பெயருடன், சிறிய அளவிலான காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்துதல் என்ற கருத்துடன் இதனை கனடாவும் மெக்சிக்கோவும் அணுகும் நிலையில், மறு பேச்சுவார்த்தை என்ற தொனிப்பிலான வார்த்தைகளே அமெரிகா தரப்பினால் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் நேற்று மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் முன்வைத்துள்ள “நவீனமயப்படுத்துதல்” மற்றும் “மீள் பேச்சுவார்த்தை” ஆகியவற்றுக்கான நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் நாளில் இருந்து ஐந்தாம் நாள் வரை மெக்சிக்கோ நகரில் நடைபெறும் எனவும், அதேவேளை அந்தந்த நாடுகள் தமது உள்நாட்டு மட்டத்திலான பேச்சுக்களை நடாத்தி தயார்படுத்தல்களை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல இந்த தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த மூம் கட்ட பேச்சுக்களை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் கனடாவில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ன்றா
இந்த நடவடிககையில் மேலும் பல கடுமையான செயற்பாடுகளை தாண்டிச் செல்ல வேண்டியுள்ளதாகவும், துரிதமாக அவற்றை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே விரைவாக இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வினை எட்ட முடியும் எனவும், எனவே அனைத்து தரப்பினரும் முடிந்தவரை விரைவாக செயற்படுவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் மூன்று நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.