கனடாவில் ஆண் பெண் பாலின அடையாளத்தினை வெளிப்படுத்தாத கடவுச்சீட்டுகள் இந்த மாத இறுதியிலிருந்து நடப்புக்கு வரவுள்ளன.
அனைவரினமும் பாலின உரிமையினைப் பேணும் வகையில் இந்த மாதம் 31ஆம் நாள் முதல் நடப்புக்கு வரவுள்ள இந்த கடவுச்சீட்டில், தாம் ஆணா அல்லது பெண்ணா என்பதனை குறிப்பிட விரும்பாதவர்கள், அதனை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஆண் அல்லது பெண் என்ற அரசாங்க ஆவணங்களில் தமது பாலின வேறுபாட்டினை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையினை தளத்தும் முடிவினை மேற்கெர்ணடுள்ள லிபரல் அரசாங்கத்தின் அண்மைய நடைமுறையாக இந்த திட்டம் இந்த மாத இறுதியிலிருந்து நடப்புக்கு வரவுள்ளது.
பாலின சமத்துவத்தினை அங்கீகரிக்கும் லிபரல் அரசாங்கத்தி்ன் இந்த நடைமுறை சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதனை முதன்முறையாக அறிமுகப்படுத்துவது தமது திணைக்களமே என்று மத்திய குடிநுளைவுத்துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
கனேடியர்கள் மத்தியில் பாலின சமத்துவத்தினை சீர்வரப் பேணும் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இந்த முடிவின் அடிப்படையில், கனடாவில் அரசாங்கம் சார்ந்த ஆவணங்களில் தனி நபர் ஒருவர் தான் ஆணா அல்லது பெண்ணா அல்லது வேறு பாலினத்தவரா என்பதனை கட்டாயம் தெரியப்படுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் எந்த ஒரு கனேடியரும் தனது பாலினம் குறித்து தெரியப்படுத்தும் முடிவினை சுயாதீனமாக விரும்பியவாறு மேற்காள்ள முடியும் என்று அமைச்சர் ஹூசெய்ன் மேலும் தெரிவித்துள்ளார்.