ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜோலார் பேட்டை எல்லையில் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.
பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி உறவினர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.