சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னியாராச்சி, சாந்த நிசாந்த, றோகித அபேகுணவர்த்தன, திலும் அமனுகம, லொகான் ரத்வத்த, பிரசன்ன ரணவீர ஆகிய ஏழு பேருமே சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.