NAFTA குறித்த பேச்சுவார்த்தையில் கனடாவின் நிலைப்பாடு மிகவும் சிக்கலாக உளன்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தை இல்லாது செய்துவிடப் போவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
23 ஆண்டுகளாக கனடா, அமெரிக்க, மெக்சிக்கோ ஆகிய நாடுகளிடையே நடப்பில் உள்ள NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மாற்றி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் வலியுறுத்தியதை அடுத்து, அது குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
இவ்வாறான நிலையில் குறித்த இந்த உடன்பாட்டினை நீக்கிவிடப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டொனால்ட் ட்ரம்ப, இந்த பேச்சுக்களில் கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் நி்லைப்பாடுகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளதாகவும், ஒப்பந்தத்தை இல்லாது செய்துவிடப் பேவதாகவும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த உடப்பாடு குறித்து ஏற்கனவே பல தடவைகள் டொனால்ட் ட்ரம்ப குறைகூறல்களை வெளியிட்டுள்ள போதிலும், பேச்சுக்களில் கனடாவின் நிலைப்பாடு குறித்து அவர் முறைப்பாடு தெரிவித்துள்ளமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வாறான பேச்சுக்கள் எப்போதும் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்பதனால், டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று றைசன்(Ryerson) பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஒரு சாதாரண வர்த்தக பேச்சுவார்த்தையே எனவும், இவற்றின் போது ஒவ்வொரு தரப்பினரும் தமது சொந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தி போரிடுவார்என் என்றும், அதனையே கனேடிய அரசாங்கமும், மெக்சிக்கோ அரசாங்கமும் செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.