ஸ்காபரோ பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மார்க்கம் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது. யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார்.
குறி்த்த அந்த 77 வயது பெண்ணும் அவரது கணவரும் பாதசாரிகள் கடவையூடாக இன்றி பிறிதொரு பகுதியால் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் வாகனத்தினால் மோதுண்டதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்காபரோ
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த குறித்த அந்தப் பெண், உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அந்த பெண்ணின் கணவர் வானத்தினால் மோதப்படாது ஒருவாறு வீதியைக் கடந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
ரொரன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை இவ்வாறு பாதசாரிகள் வானத்தினால் மோதுண்டு உயிரிழந்துள்ள 18ஆவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.