செவ்வாய்க்கிழமை அதிகாலையில், வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.
ஜப்பான் மீதான வட கொரிய ஏவுகணை : வெளிப்படையான தாக்குதலா?படத்தின் காப்புரிமைEPA
இது குறித்து கருத்து தெரிவித்த பல பாதுகாப்பு வல்லுநர்கள், இது வரை ஜப்பான் பிராந்தியம் மீது வடகொரியா ஏவியுள்ள ராக்கெட்கள் செயற்கைகோள்களை தாங்கிச் சென்றதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட கொரியாபடத்தின் காப்புரிமைREUTERS
ஆனால், இம்முறை வடக்கு ஜப்பான் மீது பறந்து சென்ற வட கொரிய ஏவுகணை ஒரு வெளிப்படையான தாக்குலுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
”இது மிகவும் தைரியமான நடவடிக்கை. மேலும், வட கொரியாவின் இந்த முயற்சி மிகவும் ஆத்திரமூட்டும் செயல். சர்வதேச சட்டத்தின்கீழ் தடை விதிக்கப்பட்ட செயலை வட கொரியா செய்துள்ளது” என்று ஹார்வார்ட் கென்னடி கல்வி நிலையத்தில் உள்ள கொரியா விவகாரம் தொடர்பான குழுவை சேர்ந்த டாக்டர். ஜான் பார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிழக்கு ஆசியாவில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரும், வட கொரியாவுடனான முன்னாள் அமெரிக்க பேச்சாளருமான கிறிஸ்டபர் ஆர் ஹில், வட கொரியாவின் இன்றைய ஏவுகணை முயற்சியை இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளில் இது மிகவும் தீவிரமான ஒன்று என்று தனது டிவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இம்முறை: ஜப்பான் பிராந்தியத்தை தாண்டி பறந்த வட கொரிய ஏவுகணைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
முன்னதாக, தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ”முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து” என்று வர்ணித்துள்ளார்.
அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.
கிம்-ஜோங் உன்படத்தின் காப்புரிமைAFP
வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன்
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று, தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து மூன்று குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஜப்பானுக்கு அப்பால் இந்த அண்மைய ஏவுகணை பறந்ததால் அப்பகுதி முழுவதும் எச்சரிக்கைகளை உண்டாக்கிய போதிலும், ஜப்பானின் பிரதான ஒலிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, இந்த ஏவுகணை முயற்சியால் எந்த சேதமும் இருந்ததற்கான அறிகுறியும் இல்லையென தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை ”மூர்க்கத்தனமான செயல்” என்றும், தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவும் ஒரு தீவிரமான மற்றும் மோசமான ஆபத்து என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறியுள்ளார்.
தனது அரசு மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.