தற்போது கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தச்சட்டம் மாகாணசபைக்கு ஆபத்தை விளைவிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்கள்
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையிலும் தோல்வியடைந்துள்ளது.
குறித்த சட்டமூலம் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலாலினால் இன்று தென் மாகாண சபையில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் சபையின் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக எவரும் வாக்களிக்காத நிலையில் எதிராக 27 பேர் வாக்களித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.