அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல்சுற்று ஆட்டத்தில் நடால் வெற்றி பெற்றார். நடப்பு சாம்பியன் கெர்பர், ஜப்பானின் நவொமி ஒசாகாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் 28-ம் தேதி தொடங்கியது.
இத்தொடரின், பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான ஆறாம் நிலை வீராங்கனை கெர்பர், தரவரிசையில் 59-வது இடத்தில் இருக்கும் நவொமி ஒசாகாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், ஒசாகா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த கெர்பர் அமெரிக்கன் ஓபன் தொடரைவிட்டு வெளியேறினார்.