இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். வடகிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கன்றன.
பல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்த போதும், இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவர்கள் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் கூறிய போதிலும் எதையும் செயற்படுத்தவில்லை.
இதனால் எமது அரசாங்கத்திற்கு மேலதிக இருவருட காலக்கெடு விதித்த சர்வதேச நாடுகள், எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக போதிய நெருக்குதல்களை ஏற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.
மேலும், உங்கள் அனைவரது போராட்டத்திலும் நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.