தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் காணாமல் சிறிலங்காவில் ஆக்கப்பட்டவர்களுக்காக, நினைவு தீபம் ஏற்றினார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, கொழும்பில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவில், இந்த நிகழ்வில் ஒன்று கூடியிருந்தனர்.