சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகும், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
அவர் நேற்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை