ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவின் முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா இன்று காலை பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து, வேல்வடிவில் வீற்றிருக்கும் ஆலய மூலவரான செல்வச் சந்நிதி முருகன், ஆறுமுக சுவாமி, மற்றும் விநாயகப் பெருமான் ஆகியோர் தனிததனித் தேர்களில் உலா வந்தனர்.யாழ். குடாநாட்டில் இருந்து மட்டுமன்றி, இலங்கைத் தீவின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்த தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர்.