100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில்டாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டின், 10ஆம் இலக்க உள்நாட்டு வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக, இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
எனினும், 100இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இந்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 59 மேலதிக வாக்குகளினால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்துக்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் போது, ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்திருந்தது.
இந்த சட்டமூலத்தின் மீது குழுநிலை வாக்கெடுப்பு நடத்த கூட்டு எதிர்க்கட்சி தரப்பில் கோரப்பட்டதை அடுத்து, இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்டது.
இறுதி வாக்கெடுப்பின் போது, 90 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 25 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 109 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சபையில் இருக்கவில்லை.
அரசாங்கத்தில் உள்ள ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் இதற்கு ஆதரவவாக வாக்களித்தனர். ஜேவிபி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை., பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டின், 10ஆம் இலக்க உள்நாட்டு வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக, இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் முன்வைத்த போது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
எனினும், 100இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இந்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 59 மேலதிக வாக்குகளினால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்துக்கு ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் போது, ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்திருந்தது.
இந்த சட்டமூலத்தின் மீது குழுநிலை வாக்கெடுப்பு நடத்த கூட்டு எதிர்க்கட்சி தரப்பில் கோரப்பட்டதை அடுத்து, இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்டது.
இறுதி வாக்கெடுப்பின் போது, 90 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 25 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 109 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சபையில் இருக்கவில்லை.
அரசாங்கத்தில் உள்ள ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் இதற்கு ஆதரவவாக வாக்களித்தனர். ஜேவிபி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை.