முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவின் நடத்தை மற்றும் அவரின் அறிக்கைகள் என்பவற்றுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, முன்னாள் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவ வீரர் ஒருவர் பைத்தியகரமான வேலைகளை செய்யும்போது, அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.