முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.
சிரிலிய அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கே அவர் இன்று வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் அதில் ஆஜராகியிருக்கவில்லை. வேறு ஒரு தினத்தில் ஆஜராவதாக தனது சட்டத்தரணி மூலம் அவர் ஏற்கனவே ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதன்படியே இன்று அவர் ஆஜராகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.