வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று பி.ப. 5.30 மணிக்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
குறித்த பேச்சுவார்த்தையின் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்படவுள்ளது. அச்சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை மல்வத்த மகாநாயக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.