மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் Iphone 8, Iphone 8 +மாடல்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் Iphone மாடல்கள் மீது, டெக்னாலஜி பிரியர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதிய, புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் முதல் முறையாக Iphone அறிமுக விழா நடைபெற்றுள்ளது. புதிய Iphone மாடல்கள் 64 GB, 256 GB என இரண்டு சேமிப்பு வசதிகளில் வெளியாக உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய Iphone மாடல்களுக்கான முன்பதிவு, வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. Iphone 8 மற்றும் 8+ மாடல்கள், இந்தியாவில் வரும் 29ஆம் தேதி ரூ.64,000 என்ற தொடக்க விலையில் கிடைக்கின்றன.
ஆப்பிள் Iphone 8 smartphones, 4.7 இஞ்ச் ரெடினா எச்.டி ஸ்கிரீன்
ஆப்பிள் Iphone 8+ smartphones, 5.5 இஞ்ச் ரெடினா எச்.டி ஸ்கிரீன்
இரண்டு புதிய மாடல்களிலும் வடிவமைப்பில் மேம்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய 10nஅ யு11 பயோனிக் சிப்செட் உடனான 6-கோர் பிராசசர் இடம்பெற்றுள்ளது.
இது Iphone 7 மற்றும் 7+ மாடலில் இடம்பெற்றுள்ள யு10 பிராசசரை விட, 70 % அதிவேக இயக்கம் கொண்டவை. அதேபோல் மேம்படுத்தப்பட்ட கேமரா வசதியும் காணப்படுகிறது.
ஆப்பிள் Iphone 8 smartphones, சிங்கிள் 12 MB பின்பக்க கேமரா
ஆப்பிள் Iphone 8+ smartphones, ஸ்போர்ட்ஸ் டுவல் 12 எம்.பி பின்பக்க கேமரா
இந்த புதிய கேமராக்கள் இயக்கத்தை துல்லியமாக படம்பிடிக்க தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. வீடியோ பதிவு செய்ய முழு எச்.டி வசதியுடன், விநாடிக்கு 240 பிரேம்கள் என்ற கணக்கில் படம் பிடிக்கலாம்.
மேலும் விநாடிக்கு 60 பிரேம்கள் என்ற அளவில் 4K வீடியோவை பதிவு செய்யலாம். Iphone 8+ மாடலில் இடம்பெற்றுள்ள டுவல் கேமரா வசதி, புகைப்படத்தை மிகவும் துல்லியமாகவும், முகத்தின் ஒளி அளவை மாற்றம் செய்து கொள்ளும் நிலையிலும் அமைந்துள்ளது.
முதன்மை பின்பக்க கேமராவில் f/1.8 வசதியும், இரண்டாம் நிலை பின்பக்க கேமராவில் f/2.8 வசதியும் உள்ளன. Iphone 8 மற்றும் 8+ மாடல்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே, கோல்ட் உள்ளிட்ட வண்ணங்களில் wireless Charging தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.