நைஜர் ஆற்றில் பயணம் செய்த படகு ஒன்று நேற்று ஆற்றில் மூழ்கியது. அதில் படகில் பயணம் செய்த 33 பேர் பலியாகினர்.
நைஜீரியாவில் இருந்து அண்டை நாடுகளான கயா மற்றும் நைஜருக்கு படகு போக்குவத்து நடைபெறுகிறது. இந்த நிலையில் நைஜர் ஆற்றில் பயணம் செய்த படகு ஒன்று நேற்று ஆற்றில் மூழ்கியது. அதில் படகில் பயணம் செய்த 33 பேர் பலியாகினர்.
இந்த படகு கயா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் இருந்து புறப்பட்டு நைஜீரியாவுக்கு வந்தது. அதில் 150 பயணிகளும் வர்த்தக பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன. பொதுவாக அதில் 70 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதால் ஆற்றில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது.
நைஜீரியாவின் ஹெப்பி மாகாணத்தில் உள்ளடங்கிய லோலோ கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. படகில் பயணம் செய்தவர்களில் இறந்த 33 பேரை தவிர 84 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனவே பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது