ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூவராலய உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியையும் ஜயந்தி சிறிசேன அம்மையாரையும் மிகுந்த கோலாகலமாக வரவேற்றனர்.