அரசியலமைப்புச் சபை இம்மாதம் 21 ஆம் திகதி காலை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் அறிக்கை மற்றும் மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கான லால் விஜயநாயக்கவின் அறிக்கை என்பனவற்றை உள்ளடக்கியதாக பிரதமரின் அறிக்கை அமையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த இடைக்கால அறிக்கை பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதனையடுத்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.