இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் இருந்து வரும், ரொஹிங்யா முஸ்லிம் அகதிகளை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வரும் நிலையில், இதுபற்றி அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
“ரொஹிங்யா அகதிகளை வெளியேற்ற வேண்டுமாயின், திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்தையும் இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும்.
ராஜிவ்காந்தி படுகொலைக்குத் தண்டனையாக, சிறிலங்காவில் இருந்து வந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும்.” என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.