மனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
ஐ.நாவை மறுசீரமைப்புச் செய்வது தொடர்பாக ஐ.நா பொதுச்சபையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே, அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலே இவ்வாறு கூறியுள்ளார்.
“ மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை. மனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர்.
நம்பகத்தன்மையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நாம் செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.