வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃபிடம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
14 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு, கடந்த 10ஆம் நாள்யன்று இலங்கைக்கு சென்றுள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளை நேற்றுச் சந்தித்திருந்தார்.
இதன்போதே இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை நடைமுறைபடுத்த ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம் என்ற தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அவரிடம் அறிக்கையொன்றை வழங்கியுள்ள நிலையில், அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.