சுவாசப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக வழிவகைகளை கனேடிய ஆராய்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுவாசப்பையில் ஏற்படும் புற்றுநோய்களை இவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலமாக, அந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இந்த வகை புற்றுநோயை கண்டறிவதற்கு தற்போது பயன்படுத்தப்படும் பரிசோதனைகளை விடவும், இந்த புதிய முறையின் போது பல்வேறு விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், இந்த முறையினை கனடாவின் பல பாகங்களிலும் உள்ள ஆராய்சியாளர்கள் குழு ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இநத புதிய முறையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பெருமளவானோருக்கு சுவாசப் புற்றுநோய் அதன் மிக ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கனடாவில் புகைத்தல் பழக்கத்திற்க அடிமையாவோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதிலும், ஏற்கனவே புகைக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தோருக்கு சுவாசப் பை புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பகள் இன்னமும் உள்ளதாகவும், இந்த நோயினால் பீடிக்கப்படுவோர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது எனவும் வன்கூவரைத் தளமாக கொண்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுவாசப் பை புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளானதாக கண்டறியப் படுவோரில் 18 சதவீதம் பேரே உயிர் பிழைப்பேரே உயிர் பிழைப்பதாகவும், ஆரம்பத்திலேயே அந்த நோய் கண்டறியப்பட்டால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 70 இலிருந்து 80 சதவீதம் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.