நேற்று இரவு நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Yonge Street மற்றம் Davis Drive பகுதியில், நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினச் சென்றடைந்த வேளையில், அங்கே ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும உடனடியாக வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி- இணைப்பு 2
நியூமார்கட் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sheldon Avenue பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினச் சென்றடைந்த வேளையில், அங்கே ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர் தொடர்பிலான அடையானத்தினை இன்று வெளியிட்டுள்ள அதிகாரிகள், சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களளையும் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஜோர்ஜியானா பகுதியைச் சேர்நத 30 வயதான கோடி ஜெனட்(Cody Gionet) என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது இன்னமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சாட்சியங்களிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள யோர்க் பிராந்திய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து்ளளனர்.