கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீன்ஸ் நாட்டைச் சென்றடைந்துள்ளார்.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த கிழக்காசிய மாநாட்டில், முதன்முறையாக கலந்து கொள்ளும் கனேடிய பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அநத வகையில் அங்கு இடம்பெறவுள்ள அந்த பிராந்தியத்திற்கான உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன், சீன அதிபர் ஷீ ஜின் பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வரிசையில் அமர்ந்து, வடகொரிய விடயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளார்.
இதேவேளை இது குறித்து இன்று பிரதமருடன் பிலிப்பீன்ஸ் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் கருத்து வெளியிடுகையில், முதன்முறையாக கனடாவுக்கு இந்த மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆராயும் உயர்நிலை மாநாட்டில் கனேடிய பிரதமருக்கும ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அநத வகையில் கனடாவைப் பொறுத்தவரையில் இது ஒரு மிகப்பெரிய விடயம் எனவும், இதற்கு முன்னர் ஒருபோதும் கனடாவுக்கு இப்படியான ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவிலலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.