தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயரிய பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில், 15 சதவீதமாக மாத்திரம் வாழும் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காது இருந்து ஏன் என்றும் அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் போர் ஒன்று ஏற்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆயினும் இன்னமும்ம் இத்தகைய செயற்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கின்ற தரப்பினர் உள்ளனர் எனவும், எனினும் பெரும்பான்மையான மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை என்றும் சந்திரிக்கா குமாரணதுங்க மேலும் தெரிவித்து்ளளார்.