இவ் விழிப்புணர்வு நடை பவணியானது நாளைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கவுள்ளது.
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் நோய் காரணியான எச்.ஜ.வி எயிட்ஸ் நோயானது இலங்கையிலும் காணப்படுகின்றது. இந் நோயின் தாக்கமானது வருடத்திற்கு 250 பேர் என்ற கணக்கில் நாட்டில் அதிகரித்து செல்வதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந் நோயின் தாக்கத்தை கட்டுபடுத்தவும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இவ் விழிப்புணர்வு நடைபவணியானது நடாத்தப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு வைத்திய நிபுணர் பிரியந்த பட்டெகல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை 7 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து நடைபவணியானது ஆரம்பித்து ஹற்றன் நசனல் வங்கி வீதியூடாக விக்ரோரியா வீதியூடாக சென்று மீண்டும் வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி நெறிக் கல்லூரியில் முடிவடையவுள்ளது. அதனை தொடர்ந்து தாதியர் பயிற்சி கல்லூரியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.