முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார்.

1882

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கையை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று மாகாண சபையில் முன்மொழிந்தார்.

வடமாகாண சபையின் 116ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மத்திய அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடமாகாண சபைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள 29 ஆயிரத்து 754 மில்லியன் 64 ஆயிரம் ரூபா நிதியினை அவையில் முன்மொழிந்த முதலமைச்சர் அதற்கான எல்லைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

அதனை அடுத்து இதன் மீதான அமைச்சுக்களின் விவாதம் எதிர்வரும் 12ஆம் 13ஆம் மற்றும் 14ஆம் நாள்களில் இடம்பெறும் என்று அவைத்தலைவரால் அறிவிக்கப்பட்டது.

வடமாகாணத்தின் முதலாவது அரசின் இறுதி வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *