ரொரன்ரோ உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த தீவிர குளிர் நிலைமை தணிந்துள்ள போதிலும், பலத்த பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் தொடர்ச்சியாக கடந்த 14 நாட்களாக நகரில் தீவிர குளிர் எச்சரிக்கையை ரொரன்ரோ நகர நிர்வாகம் பிறப்பத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரொரன்ரோ, ஹால்ட்டன், பீல், வோன், றிச்மண்ட் ஹில், மார்க்கம், ஹமில்ட்டன் பிராந்தியங்களுக்கு விடுககப்பட்டிருந்த அதி தீவிர குளிர் எச்சரிக்கை முடிவுக்கு வருவதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், இந்த பனிப்பொழிவு நிலை எதிர்நோக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று பிற்பகல் அல்லது மாலையில் இருந்து பலத்த பனிப்பொழிவு ஆரம்பமாகும் எனவும், நாளை காலை வேளைக்குள் சுமார் 10 சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு பதிவாகக்கூடும் எனவும் வானியல் அவதானிகள் முன்னுரைத்துள்ளனர்.





