லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரித்த இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.ரிக்கைகளை விடுத்துள்ளனர்.