பருத்தித்துறை நகரசபைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 6 ஆசனங்களைக் கைப்பற்றி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஏனைய கட்சிகள் 7 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 46 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 985 ஆசனங்கள் கிடைத்துள்ளன.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 509 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13.5 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு 252 ஆசனங்களே கிடைத்துள்ளன.
ஜேவிபி 6.3 வீத வாக்குகளுடன், 83 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 4.43 வீத வாக்குகளுடன், 172 ஆசனங்களைக் கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலையே வீசுவதாக வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.உள்ளூராட்சிமன்ற தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடன் இணைய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. அதேவேளை, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் கலந்துரையாட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபையில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றது. இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தன. இதனால், தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அதிகாரிகள், சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவை அறிவித்தனர். சீட்டுக் குலுக்கலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டார ரீதியில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மாநகரசபையின் 20 வட்டாரங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். திராய்மடு வட்டாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், திருப்பெருந்துறையில் சுயேட்சைக் குழுவும், நொச்சிமுனையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இங்கு கூட்டமைப்பு 6 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதனால் தொங்கு சபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது. உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும். இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவாமொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மத்தியிலிருந்து 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக எண்ணாயிரத்து 356 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 13 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வாக்களிப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குள்ள நான்கு சிங்கள வட்டாரங்களிலும், மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளது.வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரசபையின் 12 வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 வட்டாரங்களை ஐதேக கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை சிறிலங்கா சுதந்தி்ரக் கட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விகிதாசார முறைப்படியான உறுப்பினர்களின் தெரிவுடன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன. இதில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாய கட்சி 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன. இதில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாய கட்சி 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இங்கு கூட்டமைப்பு 6 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதனால் தொங்கு சபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.